Main Menu

பிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரணதண்டனை

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஃபிலிக்ஸ் டோர்ஃபின் என்ற குறித்த சந்தேக நபருக்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்க, அரசுத்தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், அதையும் மீறி, நீதிபதி மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

டோர்ஃபின், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குழுவுடன் தொடர்புபட்டுள்ளதையும், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட அதிகளவான போதைப் பொருள் என்பவற்றைச் சுட்டிக்காட்டியே நீதிபதி இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் பாலித்தீவு அருகே இருக்கும் லொம்போக் விமான நிலையத்தில் டோர்ஃபின் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவர் வைத்திருந்த பொதியில், மூன்று கிலோகிரம் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

போதைப்பொருளுக்கு எதிராக, மிகக்கடுமையான சட்டத்தைப் பின்பற்றும் நாடுகளில், இந்தோனேசியாவும் ஒன்றாகும்.

பகிரவும்...