Main Menu

பிரான்ஸ் நகராட்சித் தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு இன்று!

கொரோனா வைரஸ் முடக்கநிலை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தாமதமான பிரான்ஸ் நகராட்சித் தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றது.

முதல் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் கிடைக்காத 4,827 நகரங்களில் இறுதி சுற்று வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளதோடு இதில் 16.5 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஜனாதிபதி மக்ரோன் தனது பதவிக் காலத்தின் மீதமுள்ள இரண்டு ஆண்டுகளுக்கு முன், பாரிஸ் உட்பட பிரான்ஸ் முழுவதிலும் கட்சியின் பலத்தை நிலைநாட்ட விரும்பினார்.

ஆனால் லா ரெபுப்ளிக் என் மார்ச்சே என்ற அவரது கட்சியின் வேட்பாளர்களில் பெரும்பாலோர் மார்ச் 15 அன்று இடம்பெற்ற முதல் சுற்று வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எந்தவொரு பெரிய நகரத்திலும் வெற்றிபெறத் தவறிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு ஒரு மோசமான விளைவை பரிந்துரைக்கும் என கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...