பிரான்ஸில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை!
பிரான்ஸில் ஒருசில இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.
இதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் கட்டாய முகக்கவசம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது.
இதுதொடர்பாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நேற்று அமைச்சர்களுடனான சந்திப்பு நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
‘இரவு நேர கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இனிமேல் முடக்கநிலை கட்டுப்பாடுகள் இல்லை. அதேவேளை, முகக்கவசம் அணிவதும் இனிமேல் கட்டாயமில்லை.
ஆனால், அதில் சில விதிவிலக்குகள் உண்டு. நெருக்கமான இடங்கள், நீண்ட வரிசையின் போது, அதிக மக்கள் கூட்டம் உள்ள இடங்கள் போன்ற இடங்களில் மாத்திரம் முகக்கவசம் அணியவேண்டும்’ என கூறினார்.
ஜூன் 20ஆம் திகதி இசைத்திருவிழா இடம்பெற உள்ளதால், அன்றைய இரவில் இருந்து முடக்கநிலை கட்டுப்பாடுகள் முழுமையாக அகற்றப்படுகின்றது.
பகிரவும்...