Main Menu

பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு உச்சத்தை தொட்டது!

பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 52ஆயிரத்து 518பேர் பாதிக்கப்பட்டதோடு, 416பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால், அதிகபாதிப்பை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை 14 இலட்சத்து 66ஆயிரத்து 433பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 37ஆயிரத்து 435பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை 13 இலட்சத்து 9ஆயிரத்து 894பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 730பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 19ஆயிரத்து 104பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...