Main Menu

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

பிரபல இந்தியத் தொழில் அதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா தமது 86 ஆவது வயதில் காலமானார்.
உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொழில்துறையில் ஆற்றிய சாதனைகளுக்காக பத்மபூஷண், பத்ம விபூஷன் விருதுகளை ரத்தன் டாடா பெற்றுள்ளார்.
வாகன உற்பத்தி, தொழில்நுட்பம், இரும்பு கைத்தொழில் உள்ளிட்ட பல தொழிற்துறைகளில் டாடா நிறுவனம் முத்திரை பதிப்பதற்கு ரத்தன் டாடா பெரும்பங்காற்றியுள்ளார்.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பகிரவும்...