பாராளுமன்றத் தேர்தல் 2024 : பிற்பகல் 2 மணி வரையான வாக்குப் பதிவு வீதம்

இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணி முதல் பி.ப 4 மணி வரை நடைபெறுகிறது.
அதன்படி, இன்று பிற்பகல் 2 மணி வரை மாவட்ட ரீதியிலான வாக்களிப்பு வீதங்களை அவதானிக்கும் போது,
கம்பஹா 52%, களுத்துறை 45%, நுவரெலியா 55%, திருகோணமலை 51%, யாழ்ப்பாணம் 42%, கேகாலை 50%, இரத்தினபுரி 55%, பதுளை 51%, ஹம்பாந்தோட்டை 47%, மாத்தறை 47%, மொனராகலை 46%, கிளிநொச்சி 46%, மன்னார் 55%, மட்டக்களப்பு 47% என பதிவாகியுள்ளது.
பகிரவும்...