Main Menu

பாகிஸ்தானில் சுரங்க தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது வெடிக்குண்டு தாக்குதல் – 11 பேர் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது வெடிக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் .
6 பேர் காயமடைந்துள்ளனர்.
குண்டு வெடிப்பின் போது 17 சுரங்க தொழிலாளர்கள் வாகனத்திலிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
பகிரவும்...