Main Menu

பணயக் கைதிகளிற்கு நினைவுப் பரிசுகளை வழங்கிய ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பு தான் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த பின்னர் விடுதலை செய்த மூன்று யூதர்களிற்கும் நினைவுப்பரிசில்களை வழங்கியுள்ளது.ஹமாஸ் அமைப்பு மூன்று பணயக்கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்துள்ளது.

ரோமிகோனேன்,டோரன் ஸ்டெய்ன் பிரெச்சர்,எமிலி டமரி ஆகிய மூன்று பெண் பணயக்கைதிகiளே ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.இவர்களை 2003ம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்திருந்தது.

காசா நகரின் அல்சரயா சந்தியில் இவர்களை ஒப்படைக்கும் நிகழ்வு இடம்பெற்றவேளை பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர்..

 

ஹமாசின் ஆயுதப்பிரிவான அல்ஹசாம் பிரிகேட்டின் பெயர் பொறிக்கப்பட்ட பரிசுப்பொருட்களை மூன்று பெண்களிடமும் ஹமாஸ் உறுப்பினர்கள்கையளிப்பதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த பரிசுப்பொருட்களை பெற்றுக்கொண்டவேளை பணயக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்தவர்கள் சிரிப்பதை வீடியோவில் பார்க்க முடிந்துள்ளது.

ஹமாஸ் அமைப்பு சான்றிதழ்களையும் நினைவுப்பொருட்களையும் பரிசுப்பொருட்களையும் வழங்கியதுஎன தெரிவித்துள்ள இஸ்ரேலிய ஊடகங்கள்  சான்றிதழ்களை வழங்கினார்கள் ஒவ்வொரு சான்றிதழிலும் விடுதலைக்கான காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன என தெரிவித்துள்ள.

ஹமாஸ் வழங்கிய பரிசுப்பொதிகளிற்குள் விடுதலை செய்யப்பட்டவர்கள் ணயக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்தவேளை எடுக்கப்பட்ட படங்களும் காசாவின் வரைபடமும் காணப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பகிரவும்...