Main Menu

நைஜீரியாவில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் கைது!

நைஜீரியாவில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையின் உயர்நிலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வைத்தியர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறைச்சாலைக்குள் பயன்படுத்துவதற்கு கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைதி சிறைச்சாலைக்குள் இருந்தவாறு 24 வருடங்களாக ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்தே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...
0Shares