நேபாளத் தேர்தல் நியாயமாக நடக்கும் – இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்கி உறுதி
நேபாளத்தில் இளைய தலைமுறையினரின் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக பிரதமர் சர்மா ஒலி இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சுசீலா கார்கி, ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று உறுதியளித்தார்.
முன்னதாக, நேபாளத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, இடைக்காலப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுசீலா கார்கி, அடுத்த ஆண்டு மார்ச் 5ஆம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஊடகவியலாளர்களைச் சந்தித்த நேபாளத்தின் இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்கி, அடுத்த ஆண்டு மார்ச் 5ஆம் திகதி தேர்தல் உறுதியாக நடக்கும். அந்தத் தேர்தல் எவருடைய இடர்ப்பாடுகள், குறுக்கீடுகள் இல்லாமல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்கும் என்று தெரிவித்தார்.
முன்னாள் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, நேபாளத்தின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...