‘நெடுந்தாரகை’ படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்
நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் ஈடுபடும் பழுதடைந்துள்ள ‘நெடுந்தாரகை’ படகினைத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவது குறித்த கலந்துரையாடல்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன
இதற்கமைய ‘நெடுந்தாரகை’ படகினை நேரடியாகப் பார்வையிட்ட வடபிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, அதனைத் தற்காலிகமாகத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதன் மூலம் குறித்த படகு இன்று முதல்மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது.
மேலும், ‘நெடுந்தாரகை’ படகினை நிரந்தரமாகத் திருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
