Main Menu

நீதிமன்ற விசாரணைக்கு சமூகம் அளிக்காமையால் பிள்ளையானுக்கு 50,000 ரூபாய் அபராதம்

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ,ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது மானநஷ்ட வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இன்றைய தினம் அந்த வழக்கு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக எம்.ஏ சுமந்திரன் கூறினார்.
வழக்கு தாக்கல் செய்த சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வருகை தரவில்லை எனவும் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
எதிராளி ,வழக்கு தொடரப்பட்ட நீதிமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் இல்லை என ஆரம்ப ஆட்சேபனையை எழுப்பியுள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார்.
வழக்கு தொடர்ந்தவர் இன்றைய முன் விசாரணைக்கு வருகை தராமையினால் அவர் எதிராளிக்கு 50,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த 50,000 ரூபாயை செலுத்துவதற்கு அமைய முன் விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...
0Shares