Main Menu

நான் பூரண நலம் பெற்றுள்ளேன் – சோஃபி ட்ரூடோ

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி ஜோர்ஜ் ட்ரூடோ பூரண குணமடைந்துள்ளார்.

கடந்த 12ம் திகதி அவர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டமையினை தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சைகளுக்கு பின்னர் சோஃபி பூரண குணமடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குணமடைந்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள சோஃபி, நான் பூரண குணமடைந்துள்ள அதேவேளை எனது மருத்துவர் மற்றும் ஒட்டாவா மருத்துவ பிரிவு என்பனவற்றினூடாக நலம்பெற்றுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

தனது முகப்புத்தகத்தின் வாயிலாக கனேடிய மக்களுக்கு நேற்று காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் குறித்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

கனடாவின் முதல் பெண்மணியான சோஃபி ஜோர்ஜ் ட்ரூடோ, பிரித்தானியாவுக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டு திரும்பியதை தொடர்ந்து, கடந்த 12ம் திகதி வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதாக கனேடிய உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்திருந்த அதேவேளை அறிகுறிகள் ஆரம்பக்கட்டத்திலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சோஃபி தனிமைப்படுத்தப்பட்டதுடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

குறித்த காலப்பகுதியில், ஜஸ்டின் ட்ரூடோ வீட்டில் இருந்தவாறே அலுவலக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...