நாடளாவிய ரீதியாக கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள காவற்துறையினர்
எதிர்வரும் பண்டிகை காலத்தின் போது வீதிகளில் இடம்பெறும் அனர்த்தங்களை குறைப்பதற்காக போக்குவரத்து பிரிவு காவற்துறையினர் நாடளாவிய ரீதியாக கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதற்காக 8000 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் அவர்களின் ஒத்துழைப்புடன் சுற்றி வளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சுற்றி வளைப்புக்களின் போது மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை பரிசோதிப்பதற்காக 25000 சுவாச வாயு உபகரணங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த உபகரணங்கள் சகல காவற்துறை நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருட பண்டிகை காலங்களின் போது ஏற்பட்ட வாகன விபத்துக்கள் காரணமாக 135 பேர் பலியாகினர்.
மேலும் 750 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
