தேசிய படைவீரர்கள் தினம் இன்று
30 வருட பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தாய்நாட்டை விடுவிக்கவும், நாட்டில் நிலையான அமைதியை ஏற்படுத்த பயங்கரமான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடிய போர் வீரர் நினைவு தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் பத்தரமுல்ல படைவீரர் நினைவுத் தூபிக்கருகில் இன்று (19) பிற்பகல் 4மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவ, கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் நினைவு கூரப்படவுள்ளனர். கொரோனா தொற்று தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதோடு யுத்தத்தினால் உயிர் நீத்த 23,962 இராணுவ வீரர்கள், 1160 கடற்படையினர், 440 விமானப் படையினர் 2,598 பொலிஸார 456 சிவில் பாதுகாப்பு பிரிவினர் இன்றைய தினம் நினைவு கூரப்படுகின்றனர்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டபின்னர் உயிரிழந்த படையினருக்காக இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும். பின்னர் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இன்றைய தினம் 14, 617 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளன.
பகிரவும்...