Main Menu

தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணையொன்றைத் தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தக் கைதுக்கு அடிப்படையாக அமைந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.