தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்கு உள்ளானதில் சுமார் 39 பேர் உயிரிழப்பு
ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 60 க்கும் அதிமானோர் காயமடைந்துள்ளதாகவும் தற்போது மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக வருவதாக ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்ட் தெரிவித்தார்.
கோர்டோபா நகருக்கு அருகிலுள்ள அடமுஸ் நகருக்கு அருகில், மலக்காவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் பயணித்திருந்த அதிவேக ரயில் தடம் புரண்டு மற்றொரு பாதையில் சென்றிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடம் புரண்ட ரயில் மாட்ரிட்டில் இருந்து ஹு ல்வாவுக்குச் சென்று கொண்டிருந்த எதிரே வந்த மற்றுமொரு ரயிலில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில் வலையமைப்பு இயக்குனர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஆண்டலூசிய அவசர சேவைகள் மையம் தெரிவித்தது.
இதேவேளை கடந்து ஆண்டு மே மாதம் புதிதாக புணரமைக்கப்பட்ட ரயில் மார்க்கத்தில் ரயில் தடம்புரண்டமை பாரிய விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில விபத்துக்கான காரணத்தை உடனடியாக கூற முடியாது என மீட்புக்குழுவினர் குறிப்பிடுகின்றனர்.
நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்து ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.
மலகாவிலிருந்து பயணத்தை மேற்கொண்ட தடம் புரண்ட தனியார் ரயில் நிறுவனத்துக்கு சொந்தமான ரயிலில் சுமார் 300 பயணிகள் இருந்ததாகவும், சுநகெந Renfe நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு ரயிலில் சுமார் 100 பயணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டலூசிய அவசர சேவைகள் மையம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் தாங்கள் உயிரோடு இருப்பதை சமூக வலைதளங்களில் பதிவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
ரயிலின் சிதைந்த பாகங்கள், உயிர் பிழைத்தவர்களையும் உடல்களையும் மீட்பதை கடினமாக்கியுள்ளதாக மீட்புக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
