தென் கொரியாவில் மற்றுமொரு விமானம் அவசரமாக தரையிறக்கம்
தென் கொரியாவின் ஜெஜு ஏர் விமான சேவைக்குச் சொந்தமான மற்றுமொரு பயணிகள் விமானம் அவசரமாக தரையிறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜெஜு ஏர் விமானம் 161 பயணிகளுடன் இன்று காலை 6.37 க்கு தென் கொரிய தலைநகர் சியோலின் ஜிம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜெஜு தீவுக்கு புறப்பட்டுள்ளது.
எனினும், தரையிறங்குவதற்கு பயன்படுத்தப்படும் கியரால் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக குறித்த விமானம் காலை 7.25 க்கு மீண்டும் ஜிம்போ விமான நிலையத்திற்குத் திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், குறித்த விமானம் அங்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, ஜெஜு ஏர் விமான சேவையின் போயிங் 737 – 800 ரக விமானம் நேற்றைய தினம் விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் இதுவரையில் 179 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.