Main Menu

தென்கொரிய பாடசாலை வகுப்புகளில் மொபைல் பாவனைக்கு தடை

பாடசாலை வகுப்பு நேரங்களில் மொபைல் போன்கள், ஸ்மார்ட் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டமூலத்தை தென்கொரயா நிறைவேற்றியுள்ளது.

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே மொபைல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் அண்மைய நாடாக இதன் மூலம் தென்கொரியா மாறியுள்ளது.

அடுத்த கல்வியாண்டு 2026 மார்ச் முதல் நடைமுறைக்கு வரும் இந்தச் சட்டம், மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பழக்கத்தைக் கட்டுப்படுத்த இரு கட்சிகளும் மேற்கொண்ட முயற்சியின் விளைவாகும்.

ஸ்மார்ட்போன் பயன்பாடு மாணவர்களின் கல்வி செயல்திறனைப் பாதிக்கிறது என்றும், அவர்கள் கல்வியில் செலவிடக்கூடிய நேரத்தை வீணடிப்பதாகவும் சட்டமியற்றுபவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதன்கிழமை (27) பிற்பகல் இந்த சட்டமூலம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

163 உறுப்பினர்களில் 115 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

பகிரவும்...
0Shares