Main Menu

தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு என அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) கடையடைப்புப் போராட்டம் இடம்பெறும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது.

கோவில்பட்டி சிறையில் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தே இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் தலைவர் விக்கிரம‌ராஜா இன்று (வெள்ளிக்கிழமை) நெல்லையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, பொலிஸ் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் மருத்துவ அறிக்கை அளித்த மருத்துவர் மீதும் வழக்குப்பதிவு செய்யவேண்டும் எனவும் வரும் 30 ஆம் திகதி அனைத்து பொலிஸாருக்கும் முறைப்பாட்டு மனு அளிக்கும் அறப்போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.