Main Menu

தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டாத பிரான்ஸ் மக்கள்- திட்டத்தை விரைவு படுத்துகிறது அரசாங்கம்!

பிரான்சில் அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று முதல் விரைவுபடுத்துகின்றனர்.

அந்நாட்டில் மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைப் போடுவதற்கு மக்கள் விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தடுப்பூசித் திட்டம் விரைவுபடுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதில் விலக்கு அல்லது சலுகைககள் வழங்கப்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பாடசாலைகளுக்குச் செல்ல விரும்பினால் அல்லது கல்வி நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்பினால் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரான்சில் கொரோனா தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த வாரங்களில் 60வீத பிரான்ஸ் குடிமக்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, ஜேர்மனி, இத்தாலி உட்பட ஐரோப்பாவின் பிற நாடுகளை விட மிகக் குறைவான எண்ணிக்கையாகும் என ஐரோப்பிய செய்திகள் தெரிவித்துள்ளன.

பிரான்சில் இதுவரை 27 இலட்சத்து 83 ஆயிரத்து 256 பேருக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் இதுவரையான கொரோனா உயிரிழப்புக்கள் 67 ஆயிரத்து 750இற்கும் மேல் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...