டிரம்பை கொல்வதற்கு மீண்டும் முயற்சி-சந்தேக நபர் கைது
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினைகொலை செய்வதற்கு மீண்டும் முயற்சி இடம்பெற்றதாகதாகவும் அதனை முறியடித்துள்ளதாகவும் எவ்பிஐ தெரிவித்துள்ளது.புளோரிடாவின் வெஸ்ட்பாம் பீச்சில் கோல்வ் விளையாடுவதற்காக டிரம்;ப் சென்றவேளை கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் காணப்படுவதை அவதானித்த இரகசிய சேவை பிரிவினர் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.சந்தேகநபர் ஏகே 47 துப்பாக்கி உட்பட சில பொருட்களை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார் ஆனால் பின்னர் கைதுசெய்யப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போது இலக்குவைக்கப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பகிரவும்...