Main Menu

டிரம்புக்கு சொந்தமான சொகுசு விடுதியில் ‘ஜி-7’ மாநாடு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் அதிபர் டிரம்புக்கு சொந்தமாக, ‘கோல்ப்’ மைதானங்களுடன் கூடிய பிரமாண்ட சொகுசு விடுதி உள்ளது.

8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சொகுசு விடுதியில் 5 ‘கோல்ப்’ மைதானங்கள், 700 ஓட்டல் அறைகள், அழகு நிலையங்கள், மாநாட்டுக்கான அரங்குகள் மற்றும் கடைகள் என சகல வசதிகளும் இருக்கின்றன.

இந்த நிலையில் டிரம்புக்கு சொந்தமான இந்த சொகுசு விடுதியில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ‘ஜி-7’ மாநாடு நடைபெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், சொந்த லாபத்துக்காக டிரம்ப் தனது பதவியை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள வெள்ளை மாளிகை ‘ஜி-7’ மாநாட்டுக்காக 10-க்கும் மேற்பட்ட இடங்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும், இறுதியாகவே டிரம்பின் சொகுசு விடுதி தேர்வு செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

பகிரவும்...