ஜூலை மாதம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவித்தல் ஜூலை மாத இறுதிக்கு முன்னர் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர் எம் ஏ எல் ரத்னாயக்க தெரிவித்தார்.
இத்திகதி தொடர்பான தீர்மானத்தை ஜனாதிபதி தேர்தல் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் ஒதுக்கீட்டுக்கு இணங்க மாத்திரம் மேற்கொள்ளப்படுவதாக ஆணையாளர் ரத்னாயக்க குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணைக் குழுவில் நேற்று (16) இடம் பெற்ற விசோடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
அதன்படி செப்டம்பர் மாதம் 17ஆம் தேதிக்கு பின்னர் வரும் பொருத்தமான தினம் ஒன்றில் வாக்களிப்புகள் இடம் பெறும் என்றும் இதன் போது மேலும் சுட்டிக்காட்டினார்.
வாக்களிப்புத் தொடர்பாக பல்வேறு கடமைகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர் பொலிஸ்மா அதிபர், அச்சகத் திணைக்களத்தின் தலைவர், தபால்மா அதிபர் ஆகியோருடன் ஆரம்ப கலந்துரையாடல் இடம் பெற்றதாகவும், விரைவில் நிதி அமைத்து உடன் கலந்துரையாட உள்ளதாகவும் ஆணையாளர் கூறினார்
2024 ஆம் ஆண்டு புதிய வாக்காளர் பட்டியலுக்கு இணங்க பதிவு செய்யப்பட்டுள்ள சகல வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடி 71 இலட்சத்து 40 ஆயிரம் என்றும் 18 வயதை பூர்த்தி செய்த புதிய வாக்காளர்களின் தொகை 70 ஆயிரம் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டார்.
தற்போது வாக்கு அளிப்பு தொடர்பான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதற்கான அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் வாகனங்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான தேர்தல் மத்திய நிலையங்கள் குறித்த தகவல்கள் கிராம உத்தியோகத்தர்களுக்கு ஊடாக பெற்றுக்கொள்ளப்படுவதுடன் வாக்குப் பெட்டிகள் மற்றும் எனி அத்தியாவசிய சேவைகள் போன்றவற்றிற்காக மதிப்பீடு மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
. அவ்வாறு குறைந்த செலவில் திட்டமிடுதல் தொடர்பான வேலை திட்டத்தின் கீழ் தேர்தல் இடம்பெறுவதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
வாக்களிப்புத் தினத்தை அறிவிப்பதுடன் ஆணைகுழு வெளியிடும் நிபந்தனைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு இணங்க செயற்பட வேண்டும் என்றும் சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி தேர்தலுக்காக 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...