Main Menu

ஜூன் மாதத்தில் 3ஆம் உலகப்போர் மூளும் ஆபத்து..? -பிரபல ஜோதிடர்!

மூன்றாம் உலகப்போர் குறித்து பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் நிலையில், சமீப காலமாக பலரும் இதுகுறித்து பேச தொடங்கியுள்ளனர். முதல் இரண்டு உலகப் போர்களின் அழிவுகரமான தாக்கங்கள் இன்னும் உலகளாவிய நினைவகத்தில் பொறிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு பெரிய அளவிலான மோதல் பற்றிய பேச்சுக்களால் பகீர் கிளம்பியுள்ளது.

நாஸ்ட்ராடாமஸ் மற்றும் பாபா வங்கா உட்பட பல ஜோதிடர்கள் இதை கணித்தும் உள்ளனர். ஆகவே இந்த ஆண்டு 3ஆம் உலகபோர் நடக்கும் என கட்டாயம் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது பிரபல இந்திய ஜோதிடர் குஷால் குமாரும் இதையே கணித்துள்ளார். அதுவும் உலகப்போரின் சரியான தேதியையும் கணித்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.

லிங்க்ட்இன் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், மூன்றாம் உலகப் போருக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன என்று கூறியுள்ளார். ” 2024 உலகெங்கிலும் உள்ள ஹாட்ஸ்பாட்களில், குறிப்பாக மே 8 இல் போர் நிலைமைகள் தொடர்பாக மிகவும் கவலைக்குரியதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது – கொரியாக்கள், சீனா-தைவான், மத்திய கிழக்கு போன்ற போர் முனைகளில் இஸ்ரேல் மற்றும் பிறரை உள்ளடக்கிய போர் முனைகளில் இது மிக உயர்ந்த அதிகரிப்பைக் குறிக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன்-ரஷ்யா, நேட்டோவின் கோபமும் வெளிப்படும்,” என்று அவர் கூறினார்.

மேலும், 18 ஜூன் 2024 செவ்வாய்க்கிழமை மூன்றாம் உலகப்போரை தூண்டுவதற்கான வலுவான கிரக நிலை அமையும் என சொல்லப்படுகிறது. இருப்பினும், ஜூன் 10 மற்றும் 29 ஆகிய தேதிகளையும் குறிப்பிட்டு இந்த நாட்களில் உலகப்போர் நிச்சயம் வரும் என கூறியுள்ளார்.

பகிரவும்...