ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே அடுத்த மீளாய்வு – சர்வதேச நாணய நிதியம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுபவரை மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தேர்தலின் பின்னரே அடுத்த மீளாய்வு மேற்கொள்ளப்படும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நேற்று(12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப் பேச்சாளர் Julie Kozack இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு காலம் தொடர்பில் தேர்தலின் பின்னரான புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.