Main Menu

ஜனவரி முதல் எரிபொருட்கள் மீது புதிய கொடுப்பனவு

ஜனவரி மாதத்தில் இருந்து எரிபொருட்கள் மீது விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் Élisabeth Borne சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

கொடுப்பனவு தொகை குறித்து பிரதமர் விரிவான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை என்றபோதும், ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என்பதை தெரிவித்தார்.

‘வருட தொடக்கத்தில் இருந்து எரிபொருள் மீதான புதிய கொடுப்பனவை பெறக்கூடியதாக இருக்கும்!’ என பிரதமர் குறிப்பிட்டார். வேலை மற்றும் நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு இந்த கொடுப்பனவு ஏதுமானதாக இருக்கும் எனவும், பிரான்சின் 50 சதவீதமான குடும்பங்கள் இந்த கொடுப்பனவை பெற தகுதியுடையவர்களாக உள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, எரிபொருள் மீது அரசு வழங்கி வந்த 30 சதம் விலைக்கழிவு இவ்வாரத்தில் இருந்து 10 சதங்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. டிசம்பர் 30 ஆம் திகதி வரை இந்த 10 சதம் விலைக்கழிவு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பகிரவும்...