Main Menu

ஜனநாயக கட்சி பெரும் வெற்றி

இதுவரை வெளியான மாலைதீவு பொதுத் தேர்தல் பெறுபேறுகளின் படி  ஜனாதிபதி இப்ராஹீம் மொகமட் சோலியாவின் கட்சியான மாலைதீவு ஜனநாயக கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
87 உறுப்பினர்களை கொண்ட மாலைதீவு நாடாளுமன்றத்தின் 60 ஆசனங்களை அவரது கட்சி பெற்றுள்ளது.
இந்த நிலையில், நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வரும், முன்னாள் ஜனாதிபதியும் மாலைதீவு ஜனநாயக கட்சியின் தலைவருமான மொகமட் நஷீட் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றி குறித்து மொகமட் நஷீட் தமது டுவிற்றர் சமூக வலைய தளத்தின் ஊடாக கருத்து தெரிவிக்கையில், மாலைதீவு தற்போது ஜனநாயகத்தை நோக்கி பயணிப்பதற்கு இந்த தேர்தல் பெறுபேறு நல்ல உதாரணம் என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...