சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 25வது சிரார்த்த தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு

மலையகத்தின் மாபெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 25வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை (30) கொழும்பு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் உருவ சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சட்ட ஆலோசகர் மாரிமுத்து, தேசிய அமைப்பாளர் சக்திவேல் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
பகிரவும்...