Main Menu

சீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியக்குழு இலங்கைக்கு விஐயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு இன்று (வியாழக்கிழமை) இலங்கைக்கு வருகை தரவு உள்ளது.

இலங்கை அதிகாரிகளுக்கும், கடன் வழங்குநருக்கும் இடையிலான வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமையவுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இக்குழுவினர் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசனும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் எதிர்வரும் திங்கள்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு செய்தியாளர் சந்திப்பையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் கடந்த மாதம், பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பதை ஒருங்கிணைக்க இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான இணக்கத்தை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...