சீனாவைப் புறக்கணிக்கும் நாடுகள்: இந்தியாவின் பக்கம் திரும்பும் வெளிநாட்டு முதலீடுகள்!
சீனாவில் கொரானா வைரஸ் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை சரியாகப் பயன்படுத்தினால் கோடிக்கணக்கான வெளிநாட்டு முதலீட்டை இந்தியாவால் கவர முடியும் என வர்த்தகப் பொருளாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரானாத் தொற்றை அடுத்து சீனாவில் தங்களது முதலீடு மற்றும் உற்பத்தியை நிறுத்தத் தொடங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பார்வையை வேறு நாடுகளை நோக்கித் திருப்பியுள்ளன.
பிரம்மாண்டமான நிலப்பரப்பு மற்றும் கோடிக்கணக்கான மக்கள் இருப்பதால் இந்தியா ஏற்கனவே ஏற்றுமதிக்கு உகந்த நாடாக பல நிறுவனங்களால் கருதப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றால், உற்பத்திக்கான நாடாகவும் இந்தியாவை அந்த நிறுவனங்கள் பார்க்கத் தொடங்கியுள்ளன.
இந்தத் தருணத்தில் தடையற்ற மின்சாரம், கட்டமைப்பு வசதிகள், ஒற்றை சாரள முறை உரிமம் உள்ளிட்டவற்றை இந்தியா வழங்கினால் பெருமளவிலான அந்நிய முதலீட்டை ஈர்க்க முடியும்.
இதனிடையே, UBS என்ற நிறுவனம் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்திய ஆய்வில் 450இற்கும் அதிகமான வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து தங்களது உற்பத்தியை இதர நாடுகளுக்கு மாற்றத் திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பகிரவும்...