கொலம்பிய ஜனாதிபதியின் விசாவை இரத்து செய்தது அமெரிக்கா

காசாவிற்கான ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் (Gustavo Petro) விசாவை அமெரிக்கா இரத்து செய்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர், ட்ரம்ப்பிற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்ததால், அவரது விசாவை இரத்து செய்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ நியூயோர்க் நகரில் உத்தரவுகளை மீறி வன்முறையைத் தூண்டுமாறு அமெரிக்க ஆர்ப்பாட்டக்கார்களை வலியுறுத்தினார் என அமெரிக்க வெளியுறவுத்துறை தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
பகிரவும்...