Main Menu

குழப்பங்கள் நிறைந்த அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளதாக குற்றச்சாட்டு

குழப்பங்கள் நிறைந்த அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மனோ கணேசன், ´´பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்வது ஜனாதிபதியின் விருப்பமாக இருந்தாலும் பிரதமரின் எண்ணம் அதுவாக இருக்காது என்பது எனது அபிப்பிராயம் காரணம் மூன்றில் இரண்டு கிடைத்தால் பிரதமர் பதவி இல்லாமல் போகும் அது இல்லாமல் போனால் பிரதமருக்கு வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். 19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் காணப்படும் வரை மட்டுமே பிரதமருக்கு அதிகாரம் இருக்கும். எனக்கு பிரதமரின் மூளையை அவரின் மனதில் ஓடுவதை வாசிக்க முடியும்.

நாட்டுக்கு பெருமை தேடி தந்த சங்கக்கார மற்றும் மஹேல மீது கை வைக்காதீர்கள். ஆகவே, தேசிய கிரிக்கெட் வீரர்கள் இவ்வாறு அவமானப் படுத்தப்படுகின்றமைக்கு ஜனாதிபதியும், பிரதமரும் மன்னிப்பு கோர வேண்டும். எமது நோக்கம் சிறிகொத்தவை பிடிப்பதல்ல மாறாக அலரிமாளிகையின் பிரதமர் ஆசனத்தை பிடிப்பதாகும்.

தற்போதைய அரசாங்கம் ஒரு குழப்பவாத அரசாங்கமாக மாறியுள்ளது. ஏம்.சி.சி குழப்பம், கருணா குழப்பம் இப்போது நாட்டுக்கு பெருமைக் கொண்டு வந்த கிரிக்கெட் வீரர்களை அவமானப்படுத்தி குழப்பம். அரசாங்கத்திற்குள் குழப்பமோ குழப்பம். நாளாக நாளாக இந்த குழப்பம் மேலும் அதிகரிக்கும். மோத்தத்தில் தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொள்ளும் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளது என்றார்.

பகிரவும்...