Main Menu

குளித்துக்கொண்டே தொலைபேசியை மின்னேற்றிய 13 வயது சிறுமி மரணம்

தொலைபேசியை மின்னேற்றிய பதின்ம வயது சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி சாவடைந்துள்ளார்.

இச்சம்பவம் கடந்த நவம்பர் 29 ஆம் திகதி சனிக்கிழமை Saône-et-Loire மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இரு பதின்ம வயது சிறுமிகள் குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டே தனது தொலைபேசியை மின்னேற்றியில் பொருத்தியுள்ளார். அப்போது அவர்களுக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.

இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 13 வயதுடைய சிறுமி சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார். அவர் பலத்த மின் தாக்குதலால் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரான்சில் வரும் தோறும் சராசரியாக மின்சாரம் தாக்கில் 40 பேர் வரை மரணிக்கின்றனர். 3000 விபத்துக்கள் வருடம் தோறும் இடம்பெறுகின்றது. 

பகிரவும்...