காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு – எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு
காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக உணவின்றி, பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது.
உலக உணவுத் திட்டம் (WFP) வெளியிட்ட அறிக்கையில், “ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. 90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம், காஸாவில் பஞ்சம் குறித்து தீவிரமான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை, மேலும் ஒன்பது பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் போர் தொடங்கியதிலிருந்து ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.
