Main Menu

கம்போடியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் என தாய்லாந்து பிரதமர் அறிவிப்பு

அண்டை நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தத்தை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னர் கூறிய போதிலும், கம்போடியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் என தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் கூறியுள்ளார்.

அவர் தனது முகப்புத்தகத்திலேயே இன்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தங்கள் நிலத்திற்கும் மக்களுக்கும் எந்தத் தீங்கும் அச்சுறுத்தலும் ஏற்படாத வரை தாய்லாந்து தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தாய்லாந்து தனது பிரதேசத்தில் தொடர்ந்து குண்டு தாக்குதல் மேற்கொள்வதாக கம்போடியா குற்றம் சுமத்தியதைத் தொடர்ந்து தாய்லாந்து பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பகிரவும்...