கம்பஹாவில் வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த சாரதி கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
