Main Menu

எல்லைப் பிரச்சினை : சீனாவின் முன் மொழிவுகளை மறுத்துள்ளது இந்தியா!

லடாக் எல்லையின் முன்கள பகுதிகளிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையின் முக்கிய இடமான  பாங்காங் ஏரியை அண்மித்த பகுதிகளில் சீனாவும், இந்தியாவும் தங்களது துருப்புக்களை முன்னிறுத்தியுள்ளன.

இந்நிலையில், முன்கள படைகளை  பரஸ்பரம் விலக்கலாம் என்ற முடிவை கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின்போது சீனா முன்மொழிந்தது. இதனை இந்திய இராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

லே-லடாக் பிராந்தியத்தில் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே முன்கள துருப்புகளை பின்வாங்கச் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும் சிரிஜாப் வரம்பிற்கு உட்பட்ட எட்டு மலைச்சிகரப் பகுதிகளிலும், துருப்புக்கள் இல்லாத பகுதியாக மாற்ற சீன இராணுவ தளபதிகளின் முன்மொழிந்துள்ளதாகவும், குறித்த முன்மொழிவையும் இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பகிரவும்...