Main Menu

எரிபொருள் மீண்டும் விலை அதிகரிப்பு!

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து மீண்டும் மஞ்சள் மேலங்கி போராட்டங்கள் துளிர்விட்டுள்ள நிலையில், எரிபொருள் விலை மீண்டும் இவ்வாரத்தில் அதிகரித்துள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி அமைச்சகம் இத்தகவலை உறுதி செய்துள்ளது. டீசல் ஒரு லிட்டரின் விலை, கடந்த வாரத்தில் இருந்து சராசரியாக இரண்டு சதங்கள் விலை அதிகரித்துள்ளது. கடந்தவாரத்தில் €1,5354 யூரோக்களுக்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல் தற்போது €1,5883 யூரோக்களுக்கு விற்பனையாகின்றது.

SP 95, ஒரு லிடரின் விலை தற்போது €1,6567 யூரோக்களுக்கு விற்பனையாகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் விற்பனையாகும் அதிகபட்ச விலை இதுவாகும். கடந்த 2012 ஆம் ஆண்டில் அதிகபட்ச விலையாக ஒரு லிட்டர் €1,6664 யூரோக்களுக்கு விற்பனையாகியிருந்தது.

உலக சந்தையில் எண்ணையின் விலை அதிகரித்துள்ளதை அடுத்தே இந்த எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பகிரவும்...