Main Menu

எம்முடன் கல்வியே இன்றும் வரப்பிரசாதமாக இருக்கின்றது – அடைக்கலநாதன்

எம்முடன் கல்வியே இன்றும் வரப்பிரசாதமாக இருக்கின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆசிரியர் சமூகம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட சமூகம் எனவும் அவர்களின் தியாகம் அளப்பரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட ஆசிரியர் விடுதி திறப்பு விழாவில் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “எங்களுடைய உறவுகள் மற்றும் உடமைகள் இல்லாமல் போயுள்ளன. ஆனால் கல்வி என்பது ஒரு வரப்பிரசாதமாக இன்றைக்கும் எங்களுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

பாடசாலைகளுக்கு நிகழ்வுகளுக்குச் செல்கின்ற போது நான் ஆசிரியர் சமூகத்தை மகிழ்ச்சியுன் நினைத்துப் பார்ப்பதுண்டு. குடும்பப் பொறுப்பு அவர்கள் மத்தியில் இருக்கின்ற போதும் அதனை ஒருபுறம் வைத்துவிட்டு தமக்கு கொடுக்கப்படுகின்ற பொறுப்புக்களை திறம்படச் செய்து முடிக்கின்றனர்.

தங்களிடம் அர்ப்பணிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணம் செய்கின்றனர். இந்த சமூகம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

பகிரவும்...