Main Menu

எம்பிலிபிட்டியவில் ஆடைத் தொழிற்சாலையில் தீப்பரவல்

எம்பிலிபிட்டியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

எம்பிலிபிட்டிய நோனாகம சுதுபாலம அருகிலுள்ள பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் களஞ்சியசாலைக்குள் இன்று (3) காலை இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த 22 பேர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.