Main Menu

உலக புகழ்பெற்ற எழுத்தாளர் டோனி மாரீசன் காலமானார்

இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்ற முதல் கருப்பின பெண் என்ற பெருமைக்குரிய உலக புகழ்பெற்ற எழுத்தாளர் டோனி மாரீசன் காலமானார்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்ற முதல் கருப்பின பெண் என்ற பெருமைக்குரியவரும், உலக புகழ்பெற்ற எழுத்தாளருமான டோனி மாரீசன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88.

ஆப்பிரிக்க-அமெரிக்கரான இவர் தன்னுடைய 40-வது வயதில் ‘தி ப்ளூஸ்ட்’ என்ற பெயரில் முதல் நாவலை வெளியிட்டார். 1987-ம் ஆண்டு வெளியான ‘அன்புக்குரியவர்’ என்ற நாவல் டோனி மாரீசனை உலகப்புகழ் பெற செய்தது. பின்னாளில் அந்த நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

1993-ம் ஆண்டு அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்க இலக்கியத்தில் அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் 1996-ம் ஆண்டு தேசிய புத்தக அறக்கட்டளை அவருக்கும் பதக்கம் வழங்கியது. அதே போல், சுதந்திரத்துக்கான ஜனாதிபதி பதக்கத்தை ஒபாமாவிடம் இருந்து அவர் பெற்றார்.

1970 தொடங்கி 2015-ம் ஆண்டு வரை டோனி மாரீசன் 11 நாவல்களை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டோனி மாரீசன் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்பட பல அரசியல் தலைவர்களும், இலக்கியவாதிகளும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். டோனி மாரீசன் கருப்பின மக்களுக்கான தனிமொழியை தமது இலக்கியப் படைப்புகளில் உருவாக்க முயற்சித்தவர் என்றும், அமெரிக்காவின் பன்முக கலாசாரத்தை உலகிற்கு உரக்க தெரிவித்தவர் என்றும் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். 

பகிரவும்...