Main Menu

உலகிலேயே மிகப்பெரிய பள்ளி இந்தியாவில்தான் உள்ளது – கின்னஸ் சாதனை

லக்னோவைச் சேர்ந்த சிட்டி மொண்டிசரி பள்ளியில், 2019-20 ஆம் கல்வியாண்டில் 55,547 மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்த பள்ளியே உலகில் மிகப்பெரிய பள்ளி என கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து பள்ளியின் நிறுவுனர் ஜெகதீஷ் காந்தி கூறுகையில், “இந்தப் பள்ளியை வெறும் 5 மாணவர்களைக் கொண்டு ஆரம்பித்தேன். எங்கள் பள்ளி உலகத்திலேயே மிகப்பெரிய பள்ளியாக மாறும் என்று நான் கற்பனை செய்ததுகூட இல்லை. இப்போது 18 இடங்களில் பள்ளிகள் இயங்கி வருகின்றன. சுமார் 56 ஆயிரம் மாணவர்கள் இங்கு படிக்கின்றனர்.

எங்கள் பள்ளிக்கு அவர்களின் குழந்தைகளை நம்பி அனுப்பிய பெற்றோரின் நம்பிக்கையாலும் ஆசியாலுமே இது அனைத்தும் சாத்தியமாகி உள்ளது. நாங்கள் மாணவர்களின் கல்வி, சமூக மற்றும் ஆன்மிக அறிவை சமமாக வளர்த்தெடுக்கிறோம்.

அவர்களுக்கு மனிதத்தையும், அமைதி மற்றும் ஒற்றுமையின் முக்கியத்தையும் போதிக்கிறோம். கல்வி அறிவில் உயர் தரத்துடன் விளங்கும் எங்கள் மாணவர்கள், சர்வதேச தேர்வுகளில் தேர்ச்சியடையும் அளவுக்குத் திறன் வாய்ந்தவர்களாக உள்ளனர்” என்றார்.