Main Menu

உற்பத்திப் பொருளாதாரத்தை அதிகரிக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் : விஜித்த ஹேரத்

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்ப பிறந்திருக்கும் புதுவருடத்தில் அனைவரும் உறுதியுடன் செயற்படுவோம். அதற்காக உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

எமது நாடு பொருளாதார ரீதியில் கஷ்ட நிலைமையில் இருக்கிறது. வரலாற்று ரீதியில் எமது கொள்கையில் இருந்து வந்த குறைபாடுகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் வீழ்ந்த இடத்தில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் உறுதி பூணவேண்டும். நாட்டை கட்டியெழுப்பும் கனவு எம்மனைவரிடமும் இருக்கவேண்டும்.

நாட்டை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதாக இருந்தால் அதற்கான ஸ்திரமான முறைதான் உற்பத்தியை அடிப்படையாகக்கொண்ட பொருளாதாரத்தை நாட்டுக்குள் ஏற்படுத்துவதாகும்.

நாங்கள் இன, மத, அரசியல் ரீதியில் வேறுபட்டு இருந்தாலும் நாட்டை கட்டியெழுப்பும் பணியில் ஒரு குடும்பமாக செயற்பட்ட வேண்டும். ஒரு குடும்பமாக செயற்படும் போது குடும்பத்தின் அபிவிருத்திக்காக ஒரு சில தீர்மானங்களை எடுக்க வேண்டி ஏற்படுகிறது என்றார்.

புதுவருடத்தில் அமைச்சின் கடமைகளை இன்று புதன்கிழமை (01) ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பகிரவும்...
0Shares