Main Menu

ஈரானிய உயர் தலைவரின் X கணக்கு முடக்கம்

ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
ஹீப்ரு மொழியில் அவர் பதிவிட்ட பதிவுகள் காரணமாக எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சமூக வலைத்தளங்களில் இஸ்ரேலுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கமேனி தெரிவித்து வருகிறார்.
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும், ஈரான் தாக்குதல்களை அற்பமானது என்று இஸ்ரேல் நிராகரிப்பது சரியல்ல என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பகிரவும்...
0Shares