இஸ்ரேலுக்கு உளவு பார்த்த ஈரானியர்கள் அறுவருக்கு மரண தண்டனை

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், ஈரான் 6 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
இரண்டு நாடுகளுக்கும், இடையே கடந்த ஜுன் மாதம் 12 நாட்கள் நீடித்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர்.
இந்த மோதலுக்குப் பின்னர், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக தங்களது நாட்டைச் சேர்ந்த பலரை ஈரான் தொடர்ந்து கைது செய்து வருகிறது.
கைது செய்யப்படும் நபர்களுக்கு, எந்தவித விசாரணையுமின்றி உடனுக்குடன் மரண தண்டனையும் நிறைவேற்றி வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் குறிப்பிட்டு, மேலும் 6 பேருக்கு ஈரான் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
பகிரவும்...