Main Menu

இலங்கை மகளிர் அணி அபார வெற்றி

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டியில் இலங்கை மகளிர் அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
குறித்த போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில் 167 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
பகிரவும்...
0Shares