இனமொழிமத அடிப்படையில் அமைச்சரவையை உருவாக்கவில்லை- அமைச்சரவை பேச்சாளர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனமொழி சாதிய அடிப்படையில் அமைச்சரவையை உருவாக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையை கையாளக்கூடிய மிகத்திறமை வாய்ந்த தனிநபர்களையே நாங்கள் தெரிவு செய்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேல்மாகாண ஆளுநராக முஸ்லீம் வர்த்தகர் நியமிக்கப்பட்டுள்ளார்,பிரதி சபாநாயகர் பிரதி அமைச்சர் பதவிகளை முஸ்லீம்களிற்கு வழங்கியுள்ளோம் மேலும் தேசிய பட்டியல் மூலம் முஸ்லீம் ஒருவருக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளோம் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இலங்கை முழுவதிற்கும் சேவையாற்றுவது குறித்தே கவனம் செலுத்துகின்றோம் இன மத மொழி அடிப்படையில் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையை முஸ்லீம்சமூகம் இன மத அடிப்படையில் நோக்ககூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் ஐக்கிய இலங்கையை ஸ்தாபிக்கும் நோக்கத்துடனேயே நாங்கள் அமைச்சரவையை அரசாங்கத்தைஏற்படுத்தியுள்ளோம், என அவர் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...