Main Menu

இந்தோனேசியாவில் iPhone 16க்குத் தடை?

இந்தோனேசியாவில் Apple நிறுவனத்தின் iPhone 16 ரகத் திறன்பேசிகளுக்குத் தடை விதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apple நிறுவனம் முதலீட்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்வரை அதன் திறன்பேசியின் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படாது என்று இந்தோனேசியாவின் வர்த்தக அமைச்சர் அகுஸ் குமிவாங் கர்டாசாஸ்மிடா (Agus Gumiwang Kartasasmita) கூறியுள்ளார்.
Apple நிறுவனத்தின் TKDN என்கிற சான்றிதழ் காலவதியாகிவிட்டது என்றும் அது இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் சொன்னார்.

அந்தச் சான்றிதழைப் பெற Apple சாதனங்களில் உள்ளூர்ப் பொருள்களின் அளவு குறைந்தது 40 விழுக்காடு இருக்க வேண்டும்.

இந்தோனேசியாவில் Apple நிறுவனத்தின் முதலீடு சுமார் 109 மில்லியன் டாலராக இருக்க வேண்டும் என்றும் அது கிட்டத்தட்ட 95 மில்லியன் டாலரைத்தான் எட்டியிருப்பதாகவும் திரு அகுஸ் குறிப்பிட்டார்.

இந்தோனேசியர்கள் Apple கருவிகளை மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்று வாங்குவது வழக்கம் என Bloomberg Technoz தளம் சொன்னது.

இந்தோனேசியாவைவிட வெளிநாடுகளில் Apple கருவிகளின் விலை சற்று மலிவு என்று கூறப்படுகிறது.

பகிரவும்...