Main Menu

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கைக்கு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சுற்றுப் பயணத்தின் போது சம்பூர் சூரிய மின்சார திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், மஹவையிலிருந்து அனுராதபுரம் வரையான தொடருந்து சமிக்ஞைகள் கட்டமைப்பை திறந்து வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சில கைச்சாத்திடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பகிரவும்...